யோசுவா 4

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

Joshua 4:1 (UKJV) And it came to pass, when all the people were clean passed over Jordan, that the LORD spoke unto Joshua, saying,

1ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

2நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,

3இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.