5ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
6அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
7பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
8காத்தும், மரேஷாவும், சீப்பும், அதோராமும், லாகீசும், அசேக்காவும்,
9சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,