ஓசேயா 10

உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்தை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.

Hosea 10:15 (UKJV) So shall Bethel do unto you because of your great wickedness: in a morning shall the king of Israel utterly be cut off.

13அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.

14ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.

15உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்தை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.