யோபு 10

தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

Job 10:11 (UKJV) You have clothed me with skin and flesh, and have fenced me with bones and sinews.

9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?

11தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

12எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு ஆவியைக் காப்பாற்றினது.

13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும் இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.