யோபு 16

என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.

Job 16:17 (UKJV) Not for any injustice in mine hands: also my prayer is pure.

15நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.

16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்களின்மேல் உண்டாயிருக்கிறது.

17என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.

18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.

19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.