யோபு 18

அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்

Job 18:17 (UKJV) His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.

15அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.

16கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

17அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்

18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

19அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.