யோசுவா 19

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

Joshua 19:31 (UKJV) This is the inheritance of the tribe of the children of Asher according to their families, these cities with their villages.

29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

33நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்த ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.