சங்கீதம் 13

என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன். எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

Psalm 13:2 (UKJV) How long shall I take counsel in my soul, having sorrow in my heart daily? how long shall mine enemy be exalted over me?

1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

2என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன். எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

3என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.