பிரசங்கி 7

எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.

Ecclesiastes 7:23 (UKJV) All this have I proved by wisdom: I said, I will be wise; but it was far from me.

21சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.

22அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்கு தெரியுமே.

23எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.

24தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?

25ஞானத்தையும் காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும் மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதை செலுத்தினேன்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.