6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
8அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும் அறுமீனையும், தட்சன மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
10ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.