சங்கீதம் 116

நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

Psalm 116:14 (UKJV) I will pay my vows unto the LORD now in the presence of all his people.

12கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

14நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

15கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

16கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.