யோபு 9

பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?

Job 9:19 (UKJV) If I speak of strength, lo, he is strong: and if of judgment, who shall set me a time to plead?

17அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.

18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பில் என்னை நிரப்புகிறார்.

19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?

20நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன், என் ஜீவனை அரோசிப்பேன்.

Tamil Bible (Union Version, O.V.), Bible Society of India.